பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 கோடியே 31 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.
தைப்பூச திருவிழாவையொட்டி நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், 3 கோடியே 31 லட்சம் ரொக்கம், 557 கிராம் தங்கம், 21 கிலோ வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக பெறப்பட்டன.