கனடாவின் மாண்ட்ரியல் மாகாணத்தில் 40 சென்டி மீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
மாண்ட்ரியல் மாகாணத்தை புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில்,
மாண்ட்ரியலில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும், வெப்பநிலை வெகுவாக வீழ்ச்சியடைந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பார்க்கும் இடமெல்லாம் பனியால் மூடப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கும் நிலையில், 40 சென்டி மீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.