திருப்பரங்குன்றம் கோயில் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததால் திமுகவில் இருந்து விலகிய நபர், இந்து முன்னணி அமைப்பில் இணைந்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமிய அமைப்புகள் அசைவ உணவு உண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் நெல்லை மாநகர திமுக இலக்கிய அணியின் முன்னாள் தலைவர் சஞ்சய் குமார், அக்கட்சியில் இருந்து விலகி இந்து முன்னணி அமைப்பில் இணைந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் குற்றாலநாதன், தமிழகத்தில் இந்து விரோத அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். திருச்செந்தூர் தைப்பூச திருவிழாவின்போது எவ்வித வசதியும் செய்து தராததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் இருந்து இன்னும் பலர் விலகி இந்து முன்னணியில் இணையவுள்ளதாகவும் கூறினார்.