இந்திய விமானப் படையை நவீனமாக்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு 114 அதி நவீன போர் விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய விமானப் படையை நவீனமாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு 114 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்த புள்ளிகளை மத்திய அரசு கோரி உள்ளது.
இது நாட்டின் போர் விமானங்களின் இருப்பை வலுப்படுத்தும் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா தனது விமானப்படையை வேகமாக விரிவுபடுத்தும் நேரத்தில், இது நல்ல முடிவு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.