அரசியல் உள்நோக்கம் காரணமாகவே புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் நிதி விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என தெரிவித்தவர், தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்தாலே ஏற்க மறுக்கிறது என தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார். தமிழகம் மட்டும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினார்.
நிதி நிலுவையில் இருப்பது எனக்கு நன்றாகவே தெரியும், தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்தார்.