பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட விகடன் நிறுவனத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
தனியார் ஊடக நிறுவனமான விகடன் தனது வார இதழுக்கான அட்டைப்படத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக சித்திரம் வரையப்பட்டிருந்தது. அந்த சித்திரத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதாக கூறி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக-வினர், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணாமலை புகார் அளித்திருந்தார். இந்த சூழலில், அண்ணாமலை புகாரின் அடிப்படையில் விகடன் செய்தி நிறுவனத்தின் இணையதளம் சில இடங்களில் முடக்கப்பட்டது.
பிரதமர் மோடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட விகடன் இதழ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய, மற்றும் மாநில உள்துறை, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புக்கு பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ் மணி புகார் மனு அனுப்பியுள்ளார்.