தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு பிரிவு தகவல் அளித்ததன்பேரில் உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநில பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு தேவை என உளவு பிரிவு தகவல் அளித்தன் பேரில் உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளதாக தெரிவித்தார். இதில் அரசியல் ஒன்றுமில்லை. என்றும், ஒவ்வொரு மனிதனையும் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.
விஜய்வுடன் கூட்டணி அமைக்கப்படுமா ? என்ற கேள்விக்கு கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.