வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன.
கே.வி.குப்பம் அருகே சேத்துவண்டை கிராமத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் குடும்பத்தினர் பங்கேற்றனர் .
RSS கோட்டத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உற்சாகமாக விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.