பிலிப்பைன்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலையை, அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஹரிஷ்குமார் ஜெயின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார்.
இந்தியா – பிலிப்பைன்ஸ் நட்புறவு உருவாகி 75 ஆண்டுகள் பவளவிழா காண்பதை ஒட்டி, ஷிஃபு நகரில் உள்ள யுவிகுலாஸ் மருத்துவக் கல்லூரியில் கல்வி மற்றும் கலாச்சார விழா நடைபெற்றது.
யுவிகுலாஸ் மருத்துவக் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் டேவிட் கே.பிள்ளை தலைமையிலும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர்
விஜி சந்தோசம் முன்னிலையிலும், உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவரின் சிலை திறக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு திருவள்ளுவர் சிலை மற்றும் தமிழ், ஆங்கில திருக்குறள் நூல்கள் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டன.