நாளுக்கு நாள் நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில்…தற்போது போக்குவரத்து காவல்துறையின் ஈ-செல்லாணை போலியாக உருவாக்கி புதுவித மோசடி அரங்கேரிவருகிறது… சைபர் கொள்ளையர்களிடமிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்த ஒரு செய்திதொகுப்பை தற்போது பார்க்கலாம்…
“நீங்க சாலை விதியை மீறிட்டீங்க… அதுனால உங்க வாகனத்துக்கு அபராதம் விதிச்சிருக்கோம் “ இப்படி உங்க வாட்ஸ்ஸப் நம்பருக்கு மெசேஜ் வந்துச்சுனா… அதை உடனே உண்மைனு நம்பி அந்த லிங்கை கிளிக் பண்ணிறாதீங்க… ஏன்னா… இந்த மெசேஜ் சைபர் கிரிமிணல்ஸ் உங்களுக்கு விரிக்கப்பட்ட வலை…
ஆமாம்… போக்குவரத்து விதிமீறலுக்கு அபராத இ-செல்லாண் மாதிரியே போலியான இ-செலாணை அனுப்பி பணத்தை கொள்ளையடிக்குறதுதான் இப்போ இருக்க புது டிரெண்ட்…
சைபர் கொள்ளையர்களை எப்படி கண்டுபிடிப்பது ? சைபர் கொள்ளையர்கள்கிட்ட சிக்காமல் இருக்க என்ன செய்யலாம் ? இதையெல்லாம் இந்த தொகுப்புல விரிவா பார்க்கலாம்…
பொதுவாக போக்குவரத்து விதிமீறல்கள்ள ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் விதிமீறல்களுக்கு ஏற்ற மாதிரி அபராதம் விதிப்பது வழக்கம்… ஆனா, தற்போது சாலை விதிகளை மீறினோம் என்றால் டெக்னாலஜியோட உதவியோட சிசிடிவி காட்சி மூலம் படம்பிடிச்சு அவங்க அவங்களோட செல்போனுக்கு RTO மூலமா மெசேஜா அனுப்பிட்டுவராங்க..
இதை தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்ட ஒரு சைபர்கிரைம் கும்பல்… அப்பாவி பொதுமக்களோட பணத்தை ஸ்கெட்ச்போட்டு பறிச்சுட்டு வருது. போக்குவரத்து காவல்துறையினர் RTO மூலம் அனுப்பும் இ-செலான்ல பார்த்தோம்ன்னா… echallan.parivahan.gov.in என்ற Official website address-தான் கொடுத்துருப்பாங்க…
ஆனா, சைபர் கிரைம் கும்பல் நமக்கு அனுப்புற வாட்ஸ்ஸப் மெசேஜ்ல பார்த்தோம்ன்னா vahanpativahann.apk -னு ஒரு link இருக்கும்… வெறும் லிங்க் மட்டும் அனுப்பா மக்கள் நம்பவைக்க முடியாதுங்கறதுக்காக , லிங்க் ஓட சேர்த்து ஒரு மெசேஜும் இருக்கும்… அந்த மெசேஜ்ல உங்க கார் பைக்கோட number இருக்கும்…
இதை பார்க்குறவங்க.. மெசேஜ்ல தங்களோட vehicle number இருக்குறதால… இந்த மெசேஜை Traffic police -தான் அனுப்பியிருக்காங்கனு நம்பி… தங்களுக்கு வந்த லிங்கையும் கிளிக் பண்ணிடுறாங்க… குறிப்பா மக்களை நம்பவைக்குறதுக்காக தமிழ்நாடு அரசோட Logo-வையும் தங்களோட dp-ஆ வச்சு இதுமாதிரியான கொள்ளை சம்பவத்துல ஈடுப்படுறாங்க..
இந்த இடத்துல உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்… அது எப்படி சைபர் கொள்ளையர்கள் நம்மளோட செல்போன் நம்பர் மற்றும் vehicle number-அ correct-ஆ Mention பண்ணிருக்காங்கனு.
அதாவது நாம இன்ஸ்டகிராம மாதிரியான இணையதளங்கள நம்மளோட செல்போன் நம்பர், பைக் காரோட புகைப்படங்கள ஷேர் பண்றது மூலமா நம்மளோட தனிப்பட்ட விவரங்கள் யாரோ ஒரு தெரியாத நபருக்கு ஈசியா போய் சேருது… இதை source-ஆ பயன்படுத்தி சைபர் கொள்ளையர்கள் நமது தனிப்பட்ட விவரங்களை திருடி நமக்கே இப்டி மெசேஜ் அனுப்புறாங்க…
சரி… சைபர் கொள்ளையர்கள் அனுப்புற லிங்க் தொட்டா அடுத்து நம்மளோட செல்போன் எப்டி ஹேக் செய்யப்படுங்குறத இப்போ பார்க்கலாம்… நாம டிராபிக் ரூல்ஸை மீறிட்டோம்னு மெசேஜோட fine amount செலுத்துவதற்கான லிங்க் நமக்கு அனுப்புவாங்க… அந்த apk file-அ நாம தொட்டதும்… போலியான App ஒன்னு open ஆகும்… அதுக்குஅப்புறம் அந்த Unknown app automatic நம்ம செல்போன்ல install ஆகும்… app install அடுத்த நிமிஷமே உங்களோட போன் சைபர் கிரிமினல்ஸோட கட்டுப்பாட்டு முழுசா போயிடும்…
நம்ம செல்போனை control-அ எடுத்துகிட்ட சைபர் கிரிமினல்ஸ் அடுத்து சும்மா இருப்பாங்களா… நம்ம செல்போன்ல உள்ள contacts-க்கும் இதே லிங்கை அனுப்பி பணம் பறிக்க டிரை பண்ணுவாங்க… முக்கியமா ஹாக் செய்யப்பட்ட செல்போன் உரிமையாளரோட பெயரை பயன்படுத்தி அவரோட நண்பர்கள் உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பி சீட்டிங் பண்றாங்க…
இதையெல்லாம் விட செல்போனை ஹேக் செஞ்ச உடனே சைபர் கொள்ளையர்கள் முதல்ல டார்கெட் பண்றது நம்மளோட வங்கி கணக்கைதான்… நம்மளோட bank details-அ திருடி நமக்கே தெரியாம நம்மளோட பணத்தையும் கொள்ளையடிக்குறதா காவல்துறையினர் எச்சரிக்குறாங்க..
இவ்வளவு நேரம் சைபர் கொள்ளையர்கள் பணத்தை எப்படி கொள்ளையடிக்குறாங்கனு பார்த்தோம்… அடுத்து சைபர் கொள்ளையர்கள்கிட்டயிருந்து நாம எப்டி பாதுகாப்பா இருக்குறதுனு பார்க்கலாம்…
முதல்ல நமக்கு third party Android Application Package அதாவது apk லிங்க் மெசேஜா வந்தா நாம தொடக்கூடாது… ஏன்னா எந்த ஒரு அரசாங்கமும் இந்த apk லிங்க் download செஞ்சு fine amount-அ கட்டசொல்றது கிடையாது…
ஒருவேல உங்களுக்கு அபராத பணம் கட்டுற சூழல்வந்தா நேரடியா echallan.parivahan.gov.in என்ற Official website-ல போய் பணம் செலுத்துங்க… குறிப்பா நம்மளோட செல்போன்ல antivirus install பண்ணிவைக்குறது மூலமாவும் இதுபோன்ற பிரச்சனையில இருந்து நாம ஈசியா தப்பிக்க முடியும்..
ஒருவேல போலியான link click-அ கிளிக் பண்ணிட்டீங்கனா… அடுத்த நிமிஷமே உங்களோட UPI மற்றும் bank account -அ Block செஞ்சு வச்சிருங்க… இதுமூலமா நம்ம அக்கவுண்டல இருந்து பணத்தை திருடுறத நாம ஈசியா தடுக்க முடியும்.. கடைசிகட்டமா உங்க மொபைல் Hack ஆயிடுச்சுனு தெரிஞ்சதும்… நம்ம வீட்டு பக்கத்துல இருக்க சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்ல மறக்காம கம்பிலெயிண்ட் பண்ணிடுங்க…
இதையெல்லாம் செஞ்சுட்டாலே நாம பெரும்பாலும் தப்பித்து விடலாம்.