மகாகும்பமேளா திருவிழாவை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் இதுவரை 51 கோடி பேர் புனித நீராடி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி கும்பமேளா திருவிழா தொடங்கியது. வரும் 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த 35 நாட்களில் திரிவேணி சங்கத்தில் 51 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.