‘பிளாக் லிஸ்ட்’ செய்யப்பட்ட வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதம் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு, சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் நெரிசலை குறைப்பதற்காக ‘பாஸ்டேக்’ திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் வாகனங்களுக்கு ஏற்ப மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஸ்டேக் கட்டணம் வசூலிப்பதற்கு என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் வகுத்துள்ள புதிய விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, கே.ஒய்.சி., எனப்படும் வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரியை, பாஸ்டேக் வங்கி கணக்குகளில் முறையாக பதிவு செய்யாத வாகனங்கள், பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனத்தின் பதிவு எண்களில் முரண்பாடு இருந்தாலும் பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டு, இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது.