திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் புதுமண தம்பதி உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.
திருப்பதியில் சுஷ்மிதா என்பவருக்கும், சுரேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் திருத்தணி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
டி.வி.புரம் பகுதியில் பயணித்தபோது, அவர்களின் கார் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதேநேரம் அவ்வழியாக வந்த மேலும் 2 கார்களும் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் புதுமண தம்பதி உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.