கடந்த 15 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் கங்கைகொண்டான் சிப்காட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில், 2020ஆம் ஆண்டு சிப்காட் வளாகம் அமைக்கப்பட்டது. 500 ஹெக்டர் பரப்பளவிற்கு மேல் சென்றால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
ஆனால், சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திற்கு தற்போது வரை முறையான அனுமதி பெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சிப்காட் வளாகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.