மும்மொழிக்கொள்கை மூலம் நாடு முழுவதும் தமிழ்மொழி வளரும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய பட்ஜெட்டுக்கான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றிய கரு.நாகராஜன்,
சாமானிமக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் மத்திய பட்ஜெட்டில் பிரதமர் மோடி இடம்பெற செய்துள்ளார் என தெரிவித்தார்.
தமிழ்மொழியின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணிணை பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.