தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குமுளி செல்லும் வழியில் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வந்தது. இங்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை வெளியேறி காற்றில் கலந்தது.
இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக போராடினர்.