திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது காசி விசுவநாதர் கோயில், சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. தர்காவில் சிலர் ஆடு, கோழிகளைப் பலியிட முயன்ற சம்பவம் கடும் கண்டனங்களுக்கு உள்ளானது.
இது தொடர்பாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாபெரும் அறப்போராட்டம் நடத்தினர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.