தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவலை மக்களிடம் பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதியில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மத்திய பட்ஜெட் 2047ஆம் ஆண்டுக்கு அடித்தளமிட்டுள்ள பட்ஜெட் என்றும், தொலை நோக்கு பார்வையுடன் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும், தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவலை மக்களிடம் பேசி வருகிறார் எனவும் குற்றச்சாட்டினார்.