உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் இன்று நடைபெறவுள்ளது.
உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இப்போரினை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இரு நாட்டுக்கு இடையேயான போரினை நிறுத்த சவுதி அரேபியாவில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளே பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது