இமாச்சலப் பிரதேசத்தின் 45 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு உள்ளாவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஐஐடி ரோபர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இமயமலை ஒட்டியுள்ள மாநிலங்களில் பேரிடர் ஆபத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, ஆயிரத்து 600 மீட்டர் வரை உயரம் கொண்ட பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 16.8 டிகிரி முதல் 41.5 டிகிரி வரை சரிவுகளைக் கொண்ட பகுதிகள் பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு இரண்டையும் சந்திக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்குத்தான மலைச் சரிவுகள் மற்றும் 3,000 மீட்டருக்கு மேல் உயரத்தில் உள்ள பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.