ஜகபர் அலி கொலை வழக்கை, வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரியிடம் இருந்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. இவர் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம கொள்ளை மற்றும் கல்குவாரிகளுக்கு எதிராக பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து வந்தார்.
இதனால், கடந்த ஜனவரி 17ஆம் தேதி, மர்மநபர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனியார் குவாரி உரிமையாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜகபர் அலி கொலை வழக்கை, வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரியிடம் இருந்து விசாரணையை தொடங்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், கனிமவளத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் எந்த அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது என்பது குறித்து அறிக்கையோடு விளக்கம் அளிப்பதுடன், இதுதொடர்பான பட்டியலை சிபிசிஐடி போலீசாரும் வழங்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் இரு அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.