சென்னை OMR சாலையில் இரும்பு திருட்டை தடுக்க முயன்ற காவலாளிகளை கல்லால் அடித்து விரட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருங்குடியில் நடைப்பெற்று வரும் மெட்ரோ பணிக்காக வைத்திருந்த இரும்பு பொருட்களை ஆட்டோவில் வந்த நபர்கள் திருடுவதை பார்த்த காவலாளிகள் தடுக்க முயன்றனர்.
அப்போது திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் காவலாளிகளை கல்லால் அடித்து விரட்டினர். இது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் புகாரளிக்கப்பட்ட நிலையில், கண்ணகி நகரை சேர்ந்த 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.