முதல்வரின் தனி பிரிவில் கோரிக்கை வைத்தும் தங்களுக்கு வீடு கட்டி தராததால் முதல்வரை நேரில் சந்திக்க தலைமைச் செயலகம் வாயிலில் காத்திருப்பதாக மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தலைமை செயலகத்தில் அழுதபடியே முதல்வரை சந்திக்க வேண்டும் என திமுக உறுப்பினர் அட்டையுடன் வந்திருந்தார்.
அவரை காவல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்க விடாததால் தலைமைச் செயலகத்தின் வாயிலில் காத்திருக்கும் மூதாட்டி, முதல்வரை எப்படியாவது சந்தித்து விட்டு தான் வீட்டுக்கு செல்வேன் என அழுதபடியே கூறினார்.