பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய விகடன் குழுமத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பா.ஜ.க மாநில துனைத்தலைவர் பால் கனகராஜ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
விகடன் இதழில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய விதமாக கேலி சித்திரம் வெளியானது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விகடன் குழுமத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க மாநில துனைத்தலைவர் பால் கனகராஜ் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவறான கேலி சித்திரத்தை வெளியிட்ட போதிலும், அதை விகடன் குழுமம் உணர மறுப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் பால் கனகராஜ் எச்சரித்தார்.