பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
காவலர்களுக்கே பாதுகாப்பில்லான தமிழகத்தை பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்குவது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ள டிடிவி தினகரன், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுவதே, பெண் காவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருப்பதற்கு காரணம் என கூறியுள்ள அவர்,
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துயுள்ளார்.