வேலூர் அருகே ஆட்டோ மீது தனியர் பேருந்து மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர். மதுபோதையில் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து பாகாயம் பகுதிக்கு தனியார் பேருந்து சென்றது. வேலூர் மக்கான் பகுதி அருகே சென்றபோது தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோரம் ஆட்டோவில் ஏறி கொண்டிருந்த பயணிகள் மீது மோதியது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தூக்கி வீசப்பட்ட நிலையில், சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 கார்கள், 3 இருசக்கர வாகனங்களும் விபத்துக்குள்ளாகின.
இதில் படுகாயமடைந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மதுபோதையில் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ரவிசுந்தர் என்பவரை கைது செய்தனர்.
அப்போது, சேதமடைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கோரி போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.