தேனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயால் அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே மேற்குதொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள டி.சுப்புலாபுரம் நாழிமலை பகுதியில் ஓரிரு தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ பற்றி எரிந்தது.
அது தீயணைப்பு வீரர்களால் அணைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பகுதியில் இரண்டு இடங்களில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.