தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையில் சொகுசு கார்களில் சாகசத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஷம்சாபாத் விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் இரண்டு சொகுசு கார்கள் சாகசத்தில் ஈடுபட்டன. இந்த வீடியோ வைரலான நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.
அப்போது நம்பர் பிளேட்டுகளை கழற்றி வைத்துவிட்டு சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.