இலங்கை ஏற்றுமதி சேவை எப்போதும் இல்லாத அளவாக 19 பில்லியன் டாலர்களை எட்டும் என அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நாட்டின் வளர்ச்சி மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் நடப்பாண்டியில் இலங்கையின் வருவாய் 5 சதவீதத்தை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு 88 ரூபாய் 17 காசுகளாக வலுவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.