அமெரிக்க கடலோர காவல்படை 2 மாதங்களில் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவுக்குள் போதைப் பொருள்கள் வருவதை தடுக்கும் நோக்கில், கிழக்கு பசிபிக் பெருங்கடல், மெக்சிகோ கடற்கரையில் அமெரிக்க கடலோர காவல்படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டன.
அதன்படி டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே 11 கப்பல்களிலிருந்து சுமார் 17 டன் கொக்கைன் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்த பறிமுதல் நடவடிக்கையின் போது அமெரிக்க கடலோர காவல்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.