ஜம்மு- காஷ்மீரில் சாதனை படைக்கும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட குல்மார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜம்மு- காஷ்மீர் நிர்வாகத்துக்கும், மத்திய பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படாததால், காஷ்மீருக்கு போதிய நிதியுதவி கிடைப்பதில் சுணக்கம் நீடித்ததாக தெரிவித்தார்.
தற்போது ஜம்மு- காஷ்மீரின் சுகாதாரம், கல்வி மற்றும் விளையாட்டுத் துறையை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதற்கு போதிய நிதியுதவி அளிக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, திறன் மேம்பாட்டுக்கும் உரிய நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.