நாகையில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக வீல் சேர் வழங்கிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டளை புலிக்குடி கிராமத்தை சேர்ந்த ஆசைமணி என்பவரது மகன் அகிலேஷ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர், ஆசைமணி மற்றும் அவரது மகனை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு மனு அளிக்க அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்த கார்த்திகேயன் என்ற அலுவலர், சிறுவனுக்கு அரசு மூலமாக வீல் சேர் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
பின்னர் சிறுவனுக்கு வீல் சேர் வழங்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்திற்கு சிறுவனின் தந்தை நன்றி தெரிவித்தார்.