பெரு நாட்டில் போதைப்பொருள் வியாபாரியை கேபிபரா எனும் பொம்மை வேடமணிந்து போலீசார் கைது செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
பெரு நாட்டில் உள்ள லிமா எனும் இடத்தில் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்நபருக்கு தங்கள் மீது சந்தேகம் வராமலிருப்பதற்காக, அந்நாட்டில் பிரபலமான கேபிபரா எனும் உடையை போலீசார் அணிந்து சென்றுள்ளனர்.
பின்னர் அந்நபரிடம் காதலர் தினத்தையொட்டி பரிசுகள் வழங்குவதாக பேச்சு கொடுத்து அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், வியாபாரியை கைது செய்தனர்.