விக்கிரவாண்டி அருகே நிதி நிறுவன ஊழியர்கள் தள்ளிவிட்டதில் தனது 2 மாத கரு கலைந்து விட்டதாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இரண்டு மாத தவணை கட்ட தவறியதால் நிதி நிறுவன ஊழியர்கள், இதுதொடர்பாக கேட்டுள்ளனர். இதனால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, மணிகண்டனின் கர்ப்பிணி மனைவியான நிஷாந்தினியை நிதி நிறுவன ஊழியர்கள் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதனால், தனது இரண்டு மாத கரு கலைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள நிஷாந்தினி, நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.