காரைக்கால் விசைப்படகு மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தை கண்டித்து காரைக்காலில் விசைப்படகு மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 8-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவாக காரைக்கால் மாவட்டத்தில் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.