நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்று கிடா வெட்டி, கறி விருந்து படைக்கும் வினோத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புன்னப்பட்டி கிராமத்தில் உள்ள வேட்டைக்காரன் சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்று கறி விருந்து படைக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டுக்கான திருவிழா நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50க்கும் மேற்பட்ட ஆடுகளை இளைஞர்கள் பலியிட்டு சமைத்தனர்.
300க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் கொண்டு சாதம் தயார் செய்யப்பட்ட நிலையில், அதிகாலை பூஜைகள் செய்யப்பட்டு கறி விருந்து படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.