சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் கற்சிலை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்புவனத்தில் உள்ள வைகை ஆற்று படுகையில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆற்றுப்படுகையில் வரும் நீரின் ஓட்டத்தை திசை திருப்ப தற்காலிக கால்வாய் அமைக்க குழி பணியாளர்கள் குழி தோண்டியுள்ளனர்.
அப்போது இரண்டடி உயரத்தில் அம்மன் கற்சிலை கிடைத்துள்ளது. இதனைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அப்பகுதி மக்கள் வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கற்சிலை ஒப்படைக்கப்பட்டது.