பழனி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை அடிவாரத்தில் சித்தர் புலிப்பாணி ஜீவசமாதியில் உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சித்தர், போகர் மற்றும் புலிப்பாணி எழுதிய ஓலைச்சுவடிகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளை பயன்படுத்தி யாகம் நடைபெற்றது. பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், ஜப்பானிய தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணியம், ஜம்பு சாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஜப்பானைச் சேர்ந்தவர் வேஷ்டி சேலை அணிந்து கலந்து கொண்டனர்.