தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது கோயில்கள் சார்ந்த பொருளாதாரம் ஏற்படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் உள்ள தனியார் அரங்கில் கோயில் நிர்வாகம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை,
தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சிக்கு வரும்போது கோயில்கள் சார்ந்த பொருளாதாரம் ஏற்படுத்தப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோயில்களை மேம்படுத்துவதன் மூலம் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமாக 5 லட்சம் ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் எனக்கூறிய அண்ணாமலை, ஆனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை காணவில்லை என குற்றம் சாட்டினார்.