ஆற்காடு அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த மூன்றரை வயது பெண் மான், அங்குள்ள வாஷிங் மிஷின் சர்வீஸ் சென்டருக்குள் நுழைந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ஊருக்குள் வலம் வந்த பெண் மான்குட்டி குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் தேவி தெருவில் உள்ள வாஷிங் மிஷின் சர்வீஸ் சென்டருக்குள் நுழைந்த மூன்றரை வயது பெண் மானை, வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அதற்கு மூக்கு பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டிருந்ததை அறிந்த வனத்துறையினர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து, உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.