சென்னையில் வர்த்தக உரிமம் பெறாமலும், வரி செலுத்தாமலும் இயங்கி வந்த உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பள்ளிக்கரணையை அடுத்த தாம்பரம் – வேளச்சேரி சாலையில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உணவக வளாகம் அமைந்துள்ளது.
இதில் பாஸ்ட் புட் கடைகள், தேனீர் கடைகள், பிரியாணி கடைகள் மற்றும் சிற்றுண்டி உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 11 கடைகள் சுமார் ஓராண்டிற்கும் மேலாக வர்த்தக உரிமம் பெறாமலும், முறையாக வரி செலுத்தாமலும் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வருவாய் துறை அதிகாரிகள் அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.