தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கண்டித்து, சென்னையில் அதிமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதிமுக மாணவர் அணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.