நிலவில் ஆய்வு செய்யும் சந்திரயான் போல சமுத்ரயான் திட்டத்தின்கீழ், ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
கடலுக்கு அடியில் இருக்கும் நிக்கல், கோபால்ட், மாங்கனீசு போன்ற கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்கும் அதன் மாதிரிகளை சேகரிப்பதற்கும் மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்ப மத்திய புவி அறிவியல் அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், ஆழ்கடலில் மனிதரை அனுப்பி 15 நாட்களுக்கு மேல் சோதனை நடத்தப்பட்டது.