காதலர் தினத்தன்று 1,649 மெட்ரிக் டன் எடை கொண்ட 4 கோடியே 40 லட்சம் ரோஜா மலர்களை கையாண்டு பெங்களூரு விமான நிலையம் சாதனை படைத்து உள்ளது.
கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த ரோஜா மலர்களை பரிமாறிக் கொண்டனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு 4 கோடியே 40 லட்சம் ரோஜா மலர்களை பெங்களூரு சர்வதேச விமான நிலையம் கையாண்டு உள்ளது. அவை 22 வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் 38 நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.