கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விரும்பியதை எல்லாம் பேச யாருக்கும் உரிமை கிடையாது என சமூக வலைதள பிரபலம் ரன்வீன் அல்லாபாடியாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ரன்வீன் அல்லாபாடியா, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளரிடம் ஆட்சேபத்துக்குரிய கேள்வி கேட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.