எலான் மஸ்க் இந்தியாவில் தொழில் தொடங்குவதாக கூறப்படும் நிலையில், ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தடம் பதிக்க உள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த 1991-ஆம் ஆண்டுமுதல் பல்வேறு போட்டி நிறுவனங்களை தாம் சந்தித்து வந்ததை சுட்டிக்காட்டி, எலான் மஸ்க்கையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.