திமுக நடத்திய போராட்டத்திற்காக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தின் காரணமாக காமராஜர் சாலையில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தினர்.
போர் நினைவு சின்னத்தில் இருந்து பாரிமுனை செல்லும் மார்க்கத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு செல்வோரும், மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர்.