பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை திசை திருப்பும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பரில் அவிநாசிபாளையம் சேமலைகவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டி செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்வதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின சமூகத்தினர் புகார் அளித்தனர்.
இந்த விவகாரத்தில் திருப்பூர் காவல்துறை சார்பில் தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் ஹரிதாஸ் மற்றும் குமரன் ஆகியோர் வழக்கை திசை திருப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாகவும், விசாரணைக்கு அழைக்கப்படுவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.