காஞ்சிபுரம் கந்தகோட்டை முருகன் கோயிலில் வெள்ளி தேர்ப்பவனி உற்சவம் நடைபெற்றது.
கந்தகோட்ட முருகனுக்கு சிவப்பு நிற பட்டாடைகளும்,, வள்ளி –தெய்வானை சுவாமிகளுக்கு பச்சை நிற பட்டாடைகளும் உடுத்தி, திருவாபரணங்கள் சூடி ,கையில் வேலுடன் எழுந்தருளிய முருகனுக்கு,, மல்லிகை, கனகாம்பரம், சாமந்தி உள்ளிட்ட பூக்களால் மாலை தொடுத்து மிக ரம்யமாக காட்சியளித்தார்.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில், வள்ளி – தெய்வானையுடன், முருகப்பெருமான் வெள்ளித்தேரில் காட்சியளித்தார். மங்கல வாத்தியங்கள் முழங்க எழுந்தருளிய முருகப்பெருமானை திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு சுவாமி தரினசம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்ப்பவனியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.