சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக பொய் புகார் தெரிவித்த பரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
விருத்தாச்சலத்தை சேர்ந்த தண்டாயுதபாணி சேது ரயில் மூலம் ராமேஸ்வரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த விரக்தியில் வெடிகுண்டு இருப்பதாக அவசர எண்ணில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த புரோட்டோ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.